தில்லை கோவிந்தராஜன்
நெஞ்சையள்ளும் தஞ்சை மாவட்டத்தில் சங்க காலம் தொட்டே அனைத்துச் சமயங்களும் வளர்ச்சி பெற்றன. அதன்பின் சோழர் காலத்தில் சமணம்,பௌத்தம், சைவம்,வைணவம் எனப் பல சமயங்கள் போற்றி வளர்க்கப்பட்டன என்பதனை இன்றும் கண்ணுறலாம்.
 |
சமணச்சிற்பம் |
சமணம் இம் மாவட்டத்தில் வளர்ச்சி பெற்றிருந்த்து என்பதற்கு ஆதாரமாக களஆயவில் பல சமணத் தீர்தங்கரர்களின் சிற்பங்களை காணமுடிகின்றது. அடஞ்சூர் புலவர் அரங்கநாதன் அவர்களின் அழைப்பில் அவ்வூரில் குளக்கரையில் கல்வெட்டு உள்ளதாக கூறியதன் பயனாக களத்திற்கு பேராசிரியர் கண்ணதாசன், அருணாசலம். உமாமகேஸ்வரன் ஆகியோருடன் சென்றேன். புலவரின் மகன் மருதநம்பி எங்களுக்கு வழிகாட்டினார். அவருடைய துணையுடன் தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டம், ஆதனூர் பெரமனார் கோயில் குளக்கரையில் ஆய்வு மேற்கொண்டபோது எங்களுக்கு முதலில் ஏமாற்றம் எற்பட்டது. அப்பொழுது அங்கு வந்த குமார் என்பவர் இங்கு சிலகாலங்களுக்கு முன்பாக தலைஉடைந்த அம்மன் சிற்பம் இருந்தது எனக் கூறினார். மேலும், அப்பகுதியை
ச் சேர்ந்த ரவி, சக்தி போன்ற உள்ளுர் நண்பர் அருகிலிருந்த களத்து மேட்டினைக் காட்டி இந்த இடத்தில் கோயில் போன்ற அமைப்பு இருந்தது என்றும் அங்கு செங்கள் கற்கள் எச்சங்களாகயுள்ளதை காட்டினர். அவ்விடத்திற்கு சற்றுதொலைவில் புதர்
மறைவில் ஏதோ கற்கள் இருப்பது தெரிந்தது. அதனை நாங்கள் பார்த்போது சிற்பங்கள் என்பதை அறிந்து கொண்டோம்.அவை தலைகுப்புற இருந்தன அதனை நேராக நிமிர்த்தி ஆய்வு செய்தபொழுது அவற்றுள் தலையற்ற நிலையிலிருந்தது சமண சிற்மென்றும்.இரண்டாவது சிற்பம் இடுப்பிற்கு கீழ் உடைந்த நிலையில் அய்யனார் சிற்மென்றும் கண்டோம்.
 |
செந்தலை சமணத்துறவியைக்குறிக்கும் கல்வெட்டு |
பிரம்ம தேவன் வழிபாடு சமண மதத்தில் ஏழு கன்னியரோடு இணைத்து வழிபட வேண்டும் என சமண அறநூல்கள் கூறுகின்றன.பிரம்ம தேவர் அய்யன்,அய்யனார், பிரம்மசாத்தன், சாஸ்தா.சாத்தையா,
என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.இக்கோயில் காணும அய்யனார் பிரம்ம சாத்தன் என்ற பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளது, பிற்காலத்தில் பிரம்மசாத்த அய்யனார் பெரமானார் அய்யனார் என்று அழைக்கப்பட்டுள்ளார் என்பதை ஆய்வில் காணமுடிகின்றது.
இவ்வூருக்கு அருகாமையில் செந்தலை கோயில் அமைந்துள்ளது அக் கோயில் கல்வெட்டில் கோப்பரகேசரி பன்மருக்கு யாண்டு 12ஆவது கா.......ற்குடிப் பள்ளியுடைய ஆரம்ப வீரனேன் கையெழுத்து வட கவிர........பள்ளியுடைய கனகசேனபடாரர் கையால் யான் கொண்டு கடவ, எனக்
குறிக்கப்படுகிறது. மேலும் இக் கோயலில் காணப்படும் தூண் சிற்பங்களில்அய்யனார் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளதை இன்றும் நாம் காணலாம்.
இச்
சிற்பங்களை காணும்போது சமணத்துறவிகள் வாழ்ந்த பகுதியான செந்தலையிலிருந்து.தென் மேற்கு திசையில் நான்கு கி,மீ.,தூரத்தில் சமணர்,அய்யனார் சிற்பங்கள் காணப்படும் கிராம்மான ஆதனூர் உள்ளது. ஆகையால் இப்பகுதியில் சோழர்காலத்தில்சமணமதம் தழைத்தோங்கியிருந்ததும். சமணத்துறவிகளுக்கு சோழ மன்னர்கள் தக்க மரியாதை வழங்கினர் என்பதே உண்மையாகும்.
அன்பின் தில்லைராஜன் ஐயா,
ReplyDeleteதங்கள் பணிப் போற்றுதற்குரியது. பதிவில் படங்கள் தெரியவில்லை.
அன்புடன்,
இரா.பானுகுமார்,
சென்னை
http://www.banukumar_r.blogspot.in/